சென்னை
தமிழ்நாடு நீதித்துறை மாவட்டங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்பு விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கான இணையதள விண்ணப்பத்தை பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 26ம் தேதி (புதன்கிழமை) வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
பதவிகளும், பணியிட எண்ணிக்கையும், ஊதிய வரன்முறையும் கீழ்கண்டவற்றில் காணலாம்.
நகல் பரிசோதகர் 60 பணியிடங்கள், ஊதியம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை. நகல் வாசிப்பாளர் 11 காலிப்பணியிடங்கள். சம்பளம் ரூ.19,500 முதல் 71,900 வரை. இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் காலி பணியிடங்கள் 100. சம்பளம் ரூ.19,500 முதல் 71,900 வரை.
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் மற்றும் கட்டளை பணியாளர். காலி பணியிடங்கள் 242. சம்பளம் ரூ.19,000 முதல் 69,900 வரை. கட்டளை எழுத்தர் காலி பணியிடங்கள் 1. சம்பளம் ரூ.16,600 முதல் ரூ.60,800 . ஒளிப்பட நகல் எடுப்பவர் காலி பணியிடங்கள் 53. சம்பளம் 16,600 முதல் 60,800 வரை. ஓட்டுனர் காலி பணியிடங்கள் 27. சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை. நகல் பிரிவு உதவியாளர் காலி பணியிடங்கள் 16. சம்பளம் ரூ. 15,700 முதல் ரூ.58,100 வரை. அலுவலக உதவியாளர் காலி பணியிடங்கள் 638. சம்பளம் ரூ.15,700 முதல் 58,100 வரை.
தூய்மைப் பணியாளர் காலி பணியிடங்கள் 202 பேர். சம்பளம் ரூ. 15,700 முதல் ரூ.58,100 வரை. தோட்டப் பணியாளர் காலி பணியிடங்கள் 15. சம்பளம் ரூ. 15,700 முதல் ரூ.58,100 வரை. காவலர் மற்றும் இரவு காவலர் காலி பணியிடங்கள் 459. சம்பளம் ரூ. 15,700 முதல் ரூ.58,100 வரை. இரவு காவலர் மற்றும் மசால்ஜி காலி பணியிடங்கள் 85. சம்பளம் ரூ. 15,700 முதல் ரூ.58,100 வரை.
காவலர் மற்றும் மசால்ஜி காலி பணியிடங்கள் 18. சம்பளம் ரூ. 15,700 முதல் ரூ.58,100 வரை. தூய்மைப் பணியாளர் மற்றும் மசால்ஜி 1 பணியிடம் சம்பளம் ரூ. 15,700 முதல் ரூ.58,100 வரை. வாட்டர்மென் மற்றும் வாட்டர்வுமன் பணியிடங்கள் 2. சம்பளம் ரூ. 15,700 முதல் ரூ.58,100 வரை. மசால்ஜி காலி பணியிடங்கள் 402. சம்பளம் ரூ. 15,700 முதல் ரூ.58,100 வரை.
மேற்கண்ட பணியிடங்களுக்கான விரிவான அறிக்கை விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள், இணையளதளத்தில் பதிவு செய்யும் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும். (www.mhc.tn.gov.in). இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 27.6.2024
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings