ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனி 7வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 69). ஆடிட்டரான இவர் கடந்த 8ந் தேதி மனைவி சாதனாவுடன் தேனிக்கு சென்றிருந்தார்.
மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அவரது வீட்டில் இருந்த 235 சவரன் நகைகள், ரூ.48 லட்சம் ரொக்கப் பணம் மாயமாகியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாக சூரம்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வவருகின்றனர். சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு தேடி வந்தனர்.
மேலும் தனிப்படையை சேர்ந்த 9 போலீசார் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு சென்று முகாமிட்டு கொள்ளையர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திருட்டு குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ஆடிட்டர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்வதை முன்கூட்டியே அறிந்த மர்ம நபர்கள் காரில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். செல்போன் டவரை அடிப்படையாக கொண்டு மர்ம நபர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings