சென்னை
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இதில் ஒரு தனியார் கட்டுமான நிறுவன ஊழியர்கள் தங்கியுள்ளனர். இந்த கட்டிடத்தின் சமையலறையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியை சேர்ந்த கருப்பணன், ராமு உள்பட 5 தமிழர்கள் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்எதுவும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் குவைத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ,இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளானோம்.
உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலை சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.
காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.
இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும். இந்தியாவிற்குள் +911800 309 3793, வெளிநாடு என்றால் +91 80 6900 9901 என்று குறிப்பிட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings