in

அரசு போக்குவரத்து துறை, காவல்துறை மோதல்: உள்துறை செயலாளர் ஆலோசனை

சென்னை:

போக்குவரத்து நடத்துனர், காவலுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், அரசு போக்குவரத்து துறைக்கும் காவல்துறைக்கும் இடையே கடும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் இருநது தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் நாங்குநேரி என்ற இடத்தில் ஆறுகப்பாண்டி என்கிற காவலர் ஏறினார். அவரிடம் பயணக்சீட்டு எடுக்குமாறு நடத்துனர் கேட்டுள்ளார். அதற்கு காவலர் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுதொடர்பாக விளக்கமிளித்த அரசு போக்குவரத்து கழகம், அரசு பேருந்துகளில் காவலர்கள இலவசமாக பயணிக்க முடியாது. அதற்கான அனுமதி வாரண்ட இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் என்று கூறியிருந்தது.

அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, தலைநகர் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளுக்கு எதிராக போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.

அதாவது, ஒருவழிப்பாதையில் பயணித்தல், சீருடை அணிவதில் குறைபாடு, நிறுத்தத்தை தாண்டி நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி அரசுப் பேருந்துகளுக்கு பைன் (தண்டத்தொகை) விதித்து வருகிறது. இதனால் இரு அரசுத் துறைகளுக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் எழத் தொடங்கியுள்ளன.

இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணீந்திரரெட்டி உடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் காவல்துறை இடையே பிரச்சனை நீடித்து வரும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ரீமாஸ் புயல் வலுப்பெறுவதில் தாமதம்… எப்போது கரையை கடக்கும்…?

மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளம் தமிழில் புதுப்பிப்பு