in

சிபிடிஐடிக்கு மாறிய ஜெயக்குமார் மரண வழக்கு: குற்றவாளிகள் சிக்குவார்களா?

நெல்லை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூர் பகுதியை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிர1 தலைவராக இருந்த இவர் கடந்த 4ம் தேதி வீட்டின் தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகி மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இவர் இறப்பதற்கு முன்பு ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார். அந்த கடிகம் காவல்துறையினரிடம் சிக்கியது. இந்த கடிதத்தின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் மர்ம முடிச்சு விலகவில்லை.

போலீசாரிடம் சிக்கியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும் ஜெயக்குமார் இறப்பின் மர்மம் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் ஜெயக்கமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி சிபிசிஐடி தனது விசாரணையை தொடங்க உள்ளது. நீண்ட குழப்பதில் சென்று கொண்டிருக்கும் இந்த வழக்கிற்கு இனியாவது விடிவுகாலம் பிறக்குமா?

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கடல் சீற்றம் அதிகரிப்பு: தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிப்பு

இங்கிலாந்தில் வருகிற ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல்