ஆவடி:
முன்னணி தமிழ் நாளிதழில் நெல்லை ஃபுட் ப்ராடக்ட்ஸ் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் தேவை என விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்த மேலூர் தாலுகா தந்தை பெரியார் தெருவை சேர்ந்த அழகர்சாமியின் மகன் சபரி மணிகண்டன் என்பவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில், மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரம் வி.எஸ்.நகர் பகுதியில் தங்கவேலின் மகன் டி.எம்.மாறன் (வயது 49) என்பவர் நெல்லை ஃபுட் ப்ராடக்ட்ஸ் என்ற பெயரில் சூப்பர் ஸ்டாக் கிஸ்ட் தேவை என கவர்ச்சிகரமான விளம்பரத்தை கொடுத்து இருந்ததாகவும், இதைப் பார்த்து தன்னை, ஃபுட் ப்ராடக்ட்ஸ் டிஸ்ட்ரிபியூட்டராக நியமிக்கும்படி கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தை ஏமாற்றி வாங்கிக் கொண்டு பொருட்களை அனுப்பாமல் ஏமாற்றியதாகவும், நான் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் நாகர்கோவிலை சேர்ந்த முகமது, தி. நகரைச் சேர்ந்த சீனிவாசன், கன்னியாகுமரியைச் சேர்ந்த த.தே.யூஸ்.வில்சன், மதுரையைச் சேர்ந்த புரட்சிதாசன், நெய்வேலியைச் சேர்ந்த செல்வமணி ஆகியோரை இதேபோல் ஏமாற்றி ரூ. 65 லட்சத்து 82 ஆயிரத்து 424 ஏமாற்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ஆவடி போலீஸ் கமிஷனர் .சங்கர் புகாரை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் ஆவண நம்பிக்கை மோசடி தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி, துரித விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து குற்றஞ்சாட்ப்பட்ட மாறனை போலீசார் அதிரடியாக கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings