in

அமரர் வேலாயுதம் அவர்களின் 11ஆவது சிரார்த்த தினம்!– செந்தில் தொண்டமான் நினைவு கூர்வு

மலையக மக்களின் நலனுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, பல்வேறு சேவைகளை முன்னெடுத்த மறைந்த இலங்கை தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் அமரர் வேலாயுதம் அவர்களின் சேவைகள் என்றும் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்கும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அமரர் வேலாயுதம் அவர்களின் 11ஆவது சிரார்த்த தினமான இன்று அவரை நினைவுகூர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை மாகாண சபையில் அமரர் வேலாயுதம் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் ஆளும் கட்சியின் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், அவர் எதிர்க்கட்சி உறுப்பினராகச் செயற்பட்டார்.

எனினும், அவர் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தபோதிலும், மலையக மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு நான் முன்னெடுத்த பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்கினார். இதனை இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூருகின்றேன். மாகாண சபையில் சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும் அவர் எனக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

குறிப்பாக, 2010ஆம் ஆண்டு எனது அமைச்சின் முழு நிதியையும் பெருந்தோட்டப் பகுதிகளின் அபிவிருத்திக்காக ஒதுக்கியபோது, மாகாண சபையில் எனக்கு எதிராகப் பலரும் குரல் எழுப்பினர். பெரும்பான்மை சமூகத்திற்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.

அந்தச் சூழ்நிலையிலும், எதிர்க்கட்சியில் இருந்த அமரர் வேலாயுதம் அவர்கள், தமிழ் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு நான் முன்னெடுத்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததுடன், எனக்கு உறுதுணையாகவும் இருந்தார்.

அவரது அந்தச் செயற்பாடு அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தியது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, மக்களின் நலனுக்காகச் செயற்பட்ட அத்தகைய தலைவரை இன்று நினைவுகூர்வதில் நான் பெருமிதம் அடைகின்றேன்.

மலையக மக்களின் உரிமைகள், நலன்கள் மற்றும் அபிவிருத்திக்காக அமரர் வேலாயுதம் அவர்கள் ஆற்றிய சேவைகள் என்றும் மறக்க முடியாதவை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Keerthana

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

மன்னாரில் சுற்றுலா தகவல் மையம் திறப்பு