in

இலங்கை இராணுவத்தின் 77ஆவது ஆண்டு நிறைவு: ஸ்ரீ தலதா மாளிகையில் சமய வழிபாடு

Kandy

( கண்டி நிருபர் ஜே.எம். ஹாபீஸ்)

இலங்கை இராணுவம் நிறுவப்பட்டு 77 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, இராணுவப் படைப்பிரிவுகளுக்கு நல்லாசி வேண்டி விசேட சமய வழிபாடுகள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில்  இடம்பெற்றன.

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவப் படைப்பிரிவுகளுக்காக ஆசீர்வாதம் பெறும் வகையில் சமய வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது இலங்கை இராணுவத்தின் 25 படைப்பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கொடிகள் ஸ்ரீ தலதா மாளிகைக்கு கொண்டு வரப்பட்டதுடன், தலதா பெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

54 வயது பெண் சடலமாக -மரண விசாரணை முன்னெடுப்பு

சிங்களம் கற்பது வேலைவாய்ப்பை அதிகரிக்கும் – வடக்கு ஆளுநர்