( பேருவளை பீ.எம். முக்தார் )
பேருவளை சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருக்கும் சீனன்கோட்டை கல்வி மையம் கட்டட திறப்பு விழா 28ம் திகதி திங்கட்கிழமை கல்லூரி அதிபர் திருமதி பஹீமா பாயிஸ் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பேருவளை ஜாமியா நளீமியா கலாபீட முதல்வர் அஷ்ஷேஹ் அகார் முஹம்மத் (நளீமி) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கிறாஅத் அதனை அடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. அதிபர் திருமதி பஹீமா பாயிஸ் தலைமையுரை நிகழ்த்தினார்.
நீண்ட காலம் பாட சாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களாக பதவி வகித்து கல்லூரியின் வளர்ச்சிக்காக மகத்தான பணியாற்றிய மூத்த உறுப்பினர்களாகிய அல்ஹாஜ் எம்.இஸட்.எம். பாயிஸ், அல்ஹாஜ் ஏ.ஐ.எம். பாகிர், அல்ஹாஜ் ஏ.இஸட்.எம். ஸவாஹிர் ஸரூக், அல்ஹாஜ் முகம்மத் பைரூஸ், அல்ஹாஜ் லஹீர் ஹாஷிம், அல்ஹாஜ் ஹாரூன் பரீத், அல்ஹாஜ் மிஸ்வர் காஸிம், முஹம்மட் ஹம்ஸா மற்றும் அல்ஹாஜ் அன்ஸார் ஜூனைத், அல்ஹாஜ் இஸ்ஸத் ஸவாஹிர் ஆகியோரின் சேவைகளை கௌரவித்து நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் மேற்படி கட்டடத்தை நிர்மாணிப்பதில் இணைப்பாளர்களாக இருந்த அல்ஹாஜ் நபீஸ் துகைன், அல்ஹாஜ் இபாம் அலி, பேருவளை நகர பிதா மபாஸிம் அஸாஹிர், மேல் மாகாண சபை முன்னால் உறுப்பினர் அல்ஹாஜ் இப்திகார் ஜெமீல், அல் ஹூமைசரா தேசிய பாடசாலை அதிபர் ஜே. பர்ஸான், சீனன்கோட்டை பள்ளிசங்க இணைச் செயலாளர் அல்ஹாஜ் எம்.எம்.எம். ஷிஹாப், இணைப்பொருலாளர் அல்ஹாஜ் எம்.எம்.எம். ஹில்மி, உறுப்பினர்களான அல்ஹாஜ் இஸ்ஸத் ஸவாஹிர்,. அல்ஹாஜ் தஹ்லான் மன்ஸூர்., சிலோன் இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்க உறுப்பினர் உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், பெற்றோர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் அல்ஹாஜ்’ மிஸ்வர் காஸிம் நன்றி யுரை வழங்கினார்.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பரோபகாரியின் நிதியுதவியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டிடம் இவ்வூரின் கல்வி வரலாற்றில் ஒரு மைற்கல்லாக கருதப்படுகிறது. ஏனெனில் இவ்வூரின் கல்வி வளர்சசிக்கும், ஒழுக்கவியல் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருப்பதோடு, சன்மார்க்க வழிகாட்டலுடன் கூடிய பெண்களின் உடல், உள ஆரோக்கியம், சமூக வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டமிடலுக்கான மையப்புள்ளியாகவும் அமைய இருக்கிறது.
இப் பாடசாலையின் நீன்ட நாள் தேவையாக இருந்த கல்வி கற்பிக்கும் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கான தங்குமிட வசதிகள் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டள்ளது. இப் பாடசாலைகளை மையப்படுத்தி 2007 ம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் Science Project ன் கா.பொ.தர கணிதம், விஞ்ஞானம் மற்றும் வணிகம் போன்ற துறைகளை கற்பிப்பதற்கான மையமாகவும் இக்கட்டிடம் திகழும். குறிப்பிட்ட science project ன் மூலமாக கடந்த காலங்களில் பல வைத்தியர்கள், மொறியியலாளர்கள், கணக்காலர்கள் மற்றும் துறைசார்ந்தோர் உருவாக்கப்பட்டுள்ளனர். இக்கட்டிடம் இம்முயற்சிக்கு அச்சாணியாக திகழும் என எதிர்பார்கப்படுகிறது.
இக்கட்டிடத்தின் இன்னோர் தனிச்சிறப்பாக ஒரே கூரையின் கீழ் கேற்போர் கூடம், மாநாட்டு மண்டபம், சந்திப்பு/ ஆலோசனை அறை, விரிவுரை அறை, நிர்வாக குழு அறை மற்றும் பெண்களுக்கான பிரத்தியேக தொழுகை அறை என ஆன்மீகத்துக்கும் அறிவுக்கும் கலம் அமைக்கும் இடமாகவும் இக்கட்டிடம் திகழும். அவ்வாறே பெண்களின் உடல், உள ஆரோக்கியத்தை மையப்படுத்திய கணனி மயப்படுத்திய வாசிக சாலை, உளவள ஆலோசனை மையம், உடல் ஆரோக்கியத்திற்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகள் என பல வேலை திட்டங்களின் மையமாக இக்கட்டிடம் அமையும் என எதிர்பார்ககப்படுகிறது.
சிந்தனைகளின் முன்னோடி கல்வித்தந்தை மர்ஹூம் எம்.ஐ.எம். நளீம் ஹாஜியாரின் பெயரில் அமைந்த இக்கல்லூரி எதிர்கால சமூகத்தின் கலங்கரை விளக்காக ஒளிர்விட இக்கட்டிடம் பெரிதும் பங்களிப்பு செலுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.



GIPHY App Key not set. Please check settings