சிறிலங்கா முஸ்லிம் மீடியா ஃபோறத்தின் (SLMMF) விசேட பொதுக்கூட்டம் இன்று கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
போரத்தின் தலைவர் மற்றும் ‘விடிவெள்ளி’ பத்திரிகையின் ஆசிரியர் எம்.பீ.எம். பைறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் தூதுவர் பீ.எம். அம்சா நோக்கவுரையை நிகழ்த்தினார்.
நிகழ்வில் துருக்கி நாட்டுத் தூதுவர் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது, ஊடகத்துறை மற்றும் சமூகப் பணிகளில் நீண்டகாலமாக ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில், சிறிலங்கா முஸ்லிம் மீடியா போறத்தின் முன்னாள் தலைவர் என்.எம். அமீனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ கௌரவம் வழங்கப்பட்டது.
மேலும், சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் இதன்போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
ஊடகத்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings