in

வடக்கில் குளங்கள் அபிவிருத்தி: ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் ஆய்வு

Northern Province

 

புத்தூர்–மீசாலை வீதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் குளம், கந்தரோடைக் குளத்தின் தூர்வாரல் பணிகள் மற்றும் உடுவில் குளம் ஆகியவற்றை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (24.09.2026) வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, நீர்வளங்களைப் பாதுகாத்து எதிர்காலத் தேவைகளுக்காக அதிகளவில் பயன்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

புத்தூர்–மீசாலை வீதியில் கிறீன் லேயர் அமைப்பால் புதிய குளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்த இப்பணிகளை நேரில் பார்வையிட்ட ஆளுநர், அதன் முன்னேற்றம் தொடர்பில் அமைப்பின் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தார்.

குறித்த குளத்தை மையப்படுத்தி எதிர்காலத்தில் சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தல், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆளுநர் கலந்துரையாடினார்.

புதிய குளம் அமைக்கும் பணிகள் மழை ஆரம்பிக்கும் வரையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும், அதன் பின்னர் அடுத்த ஆண்டு இரண்டாம் கட்டமாக எஞ்சிய பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கிறீன் லேயர் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதன்போது, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் பணிகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தினார். அத்துடன், குளத்தை அமைத்த பின்னர் வலி.கிழக்கு பிரதேச சபைக்கு கையளிப்பதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆளுநர் கவனம் செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, கந்தரோடைக் குளத்தின் தூர்வாரல் பணிகளையும் ஆளுநர் நேரில் பார்வையிட்டார். அங்கு துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றத்தை அவர் அவதானித்ததுடன், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆளுநருக்கு விளக்கமளித்தார்.

கந்தரோடைக் குளத்தின் தூர்வாரல் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், அதன் மூலம் தற்போதைய கொள்ளளவை விட 25 சதவீதம் மேலதிகமாக நீரைத் தேக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் என மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினார்.

பேருவளையில் பாத்திமா ஸம்ஹா நசீரின் ‘அறியாத சுவாரஸ்யங்கள்’ நூல் வெளியீடு

இதன் பின்னர், உடுவில் குளத்தையும் ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். கமநல சேவைகள் திணைக்களத்துக்குச் சொந்தமான இக்குளத்தை எதிர்காலத்தில் வலி. தெற்கு பிரதேச சபைக்கு கையளிப்பதன் மூலம் தூர்வாரல் பணிகளை முன்னெடுக்க முடியும் என வலி. தெற்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் தி.பிரகாஸ் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினார்.

இக்குளங்கள் மற்றும் புதிய குளம் அமைக்கும் பணிகள் தொடர்பில் எதிர்காலத் தேவைகளை கருத்திற்கொண்டு திட்டமிட்ட முறையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம், நீர்வளங்களைச் சிறப்பாகப் பாதுகாத்து பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்த முடியும் எனவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஆளுநரின் இக்களப்பயணத்தின்போது ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், வலி.கிழக்கு பிரதேச செயலாளர், யாழ்ப்பாணப் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ். மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர், வலி.கிழக்கு மற்றும் வலி. தெற்கு பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அனோஜனுக்கு மன்னிப்பு கோரி ஜம்இய்யாவிடம் இந்து மதத் தலைவர்கள் மகஜர்

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

22ஆவது திருத்தத்தை ஆட்சிக்கு வந்ததும் நீக்குவோம்: சஜித் பிரேமதாச