in

மன்னார் சைனா பஜார் 49 கடைகள் வழங்கலில் முறைகேடு: ரூ.2.91 கோடி நஷ்டம்

மன்னார் – உள்ளுராட்சி

மன்னார் நகர சபையினால் “சைனா பஜார்” பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 49 கடைகள் பெறுகை நடைமுறை இன்றி முறைகேடாக வழங்கப்பட்ட ஊழல் செயற்பாட்டினால் ஏற்பட்ட நட்டத்தை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வடமாகாண ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கு எழுத்து மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,

மன்னார் நகரசபையினால் “சைனா பசார்” பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 49 கடைகள் பெறுகை நடை முறையின்றி முறை கேடாக வழங்கப்பட்ட ஊழல் செயற்பாட்டினால் ஏற்பட்ட ரூபா 2 கோடி 91 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ( 2 9,160,000.00 ) நட்டத்தை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வடமாகாண ஆளுநரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் நகரசபைக்கு ஏற்பட்ட வருமான இழப்பு காரணமாக முன்னாள் தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் மீது விசாரணை மேற்கொண்டு 1939 ஆம் ஆண்டு 61ஆம் இலக்க நகர சபைக் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 182(1) அமைய நடவடிக்கை எடுக்க கணக்காய்வு அதிபதிக்கு பாரப்படுத்துவதற்கு தங்களால் வழங்கப்பட்ட சிபார்சினை ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அனோஜனின் விடுதலைக்காக ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பை கோரும் தமிழரசுக் கட்ச சவூதி அரேபிய அதிகாரிகளுடனான இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு நட்பு நாடுகளின் ஆதரவைப் பெற முன்மொழிவு

குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது