in

ஊடகவியலாளர்களுக்கான பேரிடர் தயார்நிலை பயிற்சி

                (   ஏ.எஸ்.எம்.ஜாவித் )

பத்திரிகையாளர்களுக்கான பேரிடர் தயார்நிலை மீள்திறன் மற்றும் அறநெறி சார்ந்த ஊடக அறிக்கையிடல் குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நாடளாவிய ரீதியல் உள்ள அச்சு, இலத்திரணியல் மற்றும் சமுக ஊடகங்களில் செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் பயிற்சிப்பட்டறை ஒன்றினை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு அத்துருகிரியவில் உள்ள தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தியது.

அனர்த்த நிவாறன தேசிய மத்திய நிலையம், தேசியகட்டிட ஆராச்சி நிறுவகம், வளிமண்டவியல் திணைக்களம், இலங்கை கடற்படை மற்றும் இராணுவம் உள்ளிட்டபிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இதன்போது விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.

எதிர்காலத்தில் அனர்த்தங்களை எதிர்கொள்வது மற்றும் அதுபற்றியதகல்களை ஊடகங்களில் வெளிப்படுத்துவது சம்பந்தமாக இதன்போது ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை ;வழங்கும் நிகழ்வில் பிரதியமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரட்ண கலந்து கொண்டு பயிற்சியை முடித்த அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

அனர்த்த முகாமைத்துவம் உலகலாவிய ரீதியில் தீர்க்கமான ஒரு விடயமாகமாறியுள்ளது என அங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

டீஜிடல் தொலைக்காட்சி வேலைத்திட்டம் இலங்கையில் முன்னெடுக்கப் பட்டிருப்பதாகவும் விரைவில் இது உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படும் எனவும் எதிர்காலத்தில் அனர்த்தங்களின் போதும் சகல தொலைக்காட்சி ஒளிபரப்புக்களையும் தற்கலிகமாக இடை நிறுத்தி அனர்த்தம் பற்றிய தகவல்களை ஒளிபரப்பி மக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கும் எனவும் பிரதியமைச்சர் அங்கு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களை தொழில் ரீதியில் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து இருப்பதாகவும் ஊடகவியலாளர்களின் மேம்மபாட்டிற்காக இந்த வருடத்தில் 104 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் கீழே இந்த செயலமர்வும் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த செயலமர்வுகளை 9 மாகாணங்களிலும் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்களுக்கு கல்விப் புலமைப்பரிசில், வீடமைப்பு திட்டம் என்பனவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடத்தில் மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஈஸ்டர் வழக்கில் குற்றவாளிகளுக்கு 220 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை

டித்வா நிவாரண நிதி வழங்கப்படாததை கண்டித்து மக்கள் போராட்டம்