in

2.8 மில்லியன் பெறுமதியான பீடி இலைகள்

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ரூ.2.8 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான பீடி இலைகள் கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தினால் கைப்பற்றல்

கடலோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படையினருடன் இணைந்து 2026 செப்டெம்பர் 21ஆம் திகதி காலை தொடுவாவ பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, கடலோர பாதுகாப்புத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக நாட்டுக்குள் கொண்டு செல்ல முடியாமல் குடாமடுவெல்ல கடற்கரையில் கைவிடப்பட்டிருந்த 409 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகையின் மொத்த பெறுமதி ரூபாய் 2.8 மில்லியனுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகை மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தோடுவாவ பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தலைமன்னார் கடலில் மீனவர்கள் மீட்பு

மன்னாரில் பிரமாண்டமாக நிறைவடைந்த MSPL-2026 மென்பந்து கிரிக்கெட்