in

யாழ்ப்பாணம்–கொழும்பு பேருந்துகள் மீது அதிரடி சோதனை: 2 சிக்கின

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் பொலிஸாரால் நேற்று (20.09.2026) ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டறியப்பட்டதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படையினர் மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து செயற்பட்டனர்.

பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி ஈடுபடும் பேருந்துகளை அடையாளம் கண்டு, அவற்றின் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களைப் பரிசோதித்து, சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதே இச்சோதனை நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

இதன்போது உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட இரண்டு பேருந்துகள் கண்டறியப்பட்டன. அவை தொடர்பில் பொலிஸாரால் நீதிமன்றுக்கு முற்படுத்த திகதி குறிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட அதேவேளை தற்காலிகமாக நேற்றையதினம் சேவையைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டன.  

இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சில பேருந்துகள், அவற்றிடம் உரிய வழித்தட அனுமதிப்பத்திரங்கள் இல்லாத காரணத்தால் மாற்று மார்க்கங்கள் ஊடாகச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

தற்போது உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் அனைத்து பேருந்து உரிமையாளர்களும் இயக்குநர்களும் உடனடியாக இவ்வாறான சேவைகளை நிறுத்தி, தேவையான வழித்தட அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதியும் இதேபோன்ற சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட இரண்டு பேருந்துகள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கீரிமலை மருத்துவக் கழிவுகள் உடனடியாக அகற்றம்

தேசிய அறிவுஜீவிகள் அமைப்பு- உபாலி பன்னில