in

கொழும்பு ஹைரியா பெண்கள் கல்லூரி விருது வழங்கும் நிகழ்வு

                (  ஏ.எஸ்.எம்.ஜாவித்  )

கொழும்பு ஹைரியா பெண்கள் கல்லூரியின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு கொள்ளுப்பிட்டி பிஷப்ஸ் கல்லூரி பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி ஜுமானா நிஸாம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் கலந்து கொண்டதுடன் மாகாண கல்வித் திணைக்கள பணிப்பாளர் ஏ.எஸ்.நஜீப் கெளரவ அதிதியாக கலந்து கொண்டார். கொழும்பு பல்கலைக்கழக பீடாதிபதி பேராசிரியர் ஏ.ஏ.அஸீஸ் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் வரவேற்புரை நிகழ்த்தியதுடன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் உரையாற்றினார்.

மாணவிகளுக்கான விருதுகளை பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகள் வழங்கி வைத்தனர்.கல்லூரியின் நினைவு மலரும் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலில் சித்தி பெற்ற மாணவிகள், க.பொ.த.சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் ஆகியோர்களும் நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

பாடசாலையில் சகல துறைகளிலும் சிறந்த திறமைகளை காட்டிய மாணவிகளுக்கு விசேட விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் உள்ளிட்ட அதிதிகளுக்கு கல்லூரி அதிபரினால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

மாணவிகளின் கஸீதா, கலாசார நடனம் என்பனவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவிகள், பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையிலான வர்கள் கலந்து கொண்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நலிந்த ஊடகவியலாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதியுதவி

அனோஜன் விடுதலைக்காக நற்பிட்டிமுனையில் கையெழுத்து சேகரிப்பு