இந்திய அரசாங்கத்தின் சர்வதேச இளம் தலைவர்கள் செயலமர்வில் அமீர் அப்னான் பங்கேற்பு!
இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில் புதுடெல்லியில் நாளை ஆரம்பமாகவுள்ள சர்வதேச இளம் தலைவர்களுக்கான மேம்பாட்டுச் செயலமர்வில் (International Young Leaders Development Workshop) கலந்துகொள்வதற்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை இளைஞர் அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான அமீர் அப்னான் அவர்கள் இந்தியா பயணமாகின்றார்.
உலகளாவிய ரீதியில் இளம் தலைவர்களின் தலைமைத்துவ ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்செயலமர்வில் பங்கேற்பதற்காக, இலங்கையிலுள்ள முன்னணி அரசியல் கட்சிகளிடமிருந்து ஆற்றல்மிக்க இளம் பிரதிநிதிகள் கோரப்பட்டிருந்தனர்.
இதற்கமைய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ அல்-ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நேரடிப் பரிந்துரையின் பேரிலேயே அமீர் அப்னான் இம்மாநாட்டிற்கான இலங்கைப் பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பிரதேசத்தில் இளைஞர் சமூகத்தின் எழுச்சிக்காகவும், பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஒரு இளம் மக்கள் பிரதிநிதி சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு, நாட்டின் பிரதிநிதியாகப் பயணிப்பது அப்பிரதேச இளைஞர் சமூகத்திற்கு கிடைத்த பெருமையாகும்.
இச்செயலமர்வின் மூலம் சர்வதேச அளவிலான தலைமைத்துவப் பயிற்சிகள், கொள்கை வகுத்தல் மற்றும் அரசியல் அனுபவங்களைப் பெற்று, அவர் தாய்நாட்டிற்கும் சம்மாந்துறை மண்ணிற்கும் புதிய தொலைநோக்குடன் சேவையாற்ற முடியும் என அமீர் அப்னான் தெரிவித்தார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings