in

ரயில்வே போராட்டம்: உண்மைத்தகவலை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி

  1. 2026 செப்டெம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களில் முன்னெடுக்கப்பட்ட ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை மற்றும் அதற்குக் காரணமான விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டுவதற்காக தமது தொழில்சார் பொறுப்பை நிறைவேற்றிய அனைத்து ஊடகவியலாளர்கள், ஊடகத் தொழிலாளர்கள் மற்றும் சுயாதீன ஊடக நிறுவனங்களுக்கும் இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தனது கௌரவத்தையும் இதயப்பூர்வமான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது என்று இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையின்போது, மக்களுக்கு தெரிய வேண்டியது ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன என்ற விடயம் மட்டுமல்ல. அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கான காரணங்கள், ரயில்வே சேவையில் காணப்படும் பிரச்சினைகள், ஊழியர்கள் முன்வைத்த விடயங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைக்குப் பின்னணியில் இருந்த உண்மையான நிலைமை ஆகியவற்றையும் மக்களிடம் கொண்டு செல்வது மிகவும் முக்கியமானதாக இருந்தது.

அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் வகையில் களத்திற்குச் சென்று, சம்பவங்களை செய்தியாக்கி, பல்வேறு தரப்பினரிடமிருந்து தகவல்களைப் பெற்று அவற்றை மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்த அனைத்து ஊடகவியலாளர்களின் தொழில்சார் அர்ப்பணிப்பையும் நாம் மிகுந்த மரியாதையுடன் பாராட்டுகிறோம்.

குறிப்பாக, அரசாங்கத் தரப்பிலிருந்து பல்வேறு அழுத்தங்களும் நெருக்குதல்களும் ஏற்பட்ட போதிலும், அவற்றுக்கு அஞ்சாமலும் அடிபணியாமலும், மக்களின் தகவல் அறியும் உரிமைக்காக சம்பவங்களை செய்தியாக்க நடவடிக்கை எடுத்த ஊடகவியலாளர்களுக்கு எமது விசேட கௌரவம் உரித்தாகிறது.

ஊடகவியலாளரின் உண்மையான பொறுப்பு எந்தவொரு தரப்பிற்காகவும் சார்பாக நிற்பது அல்ல. அழுத்தங்களுக்கு மத்தியிலும் தனது சுயாதீனத்தன்மையைப் பாதுகாத்து மக்களிடம் தகவல்களை கொண்டு செல்வதே அந்தப் பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றி, எமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பான விடயங்களை மக்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திய உங்கள் அனைவரினதும் சேவையை நாம் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூருகிறோம்.

களத்தில் இருந்து இரவு பகலாக சம்பவங்களை செய்தியாக்கிய ஊடகவியலாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், செய்தி அறைகளிலிருந்து அந்தத் தகவல்களை மக்களிடம் கொண்டு சென்ற ஊடகத் தொழிலாளர்கள், அத்துடன் அதற்காக சுயாதீனமான இடத்தை வழங்கிய அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் எமது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீங்கள் எங்களுக்காக குரல் கொடுத்தீர்கள் என்று நாங்கள் கூறவில்லை.நீங்கள் குரல் கொடுத்தது மக்களின் தகவல் அறியும் உரிமைக்காகவே.அந்தச் சுயாதீனத்தன்மைக்கும் தொழில்சார் அர்ப்பணிப்பிற்குமே நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்.

அழுத்தங்களுக்கு மத்தியிலும் அஞ்சாமல், தமது தொழில்சார் பொறுப்பையும் ஊடக சுயாதீனத்தன்மையையும் பாதுகாத்து மக்களிடம் தகவல்களை கொண்டு சென்ற அனைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் சுயாதீன ஊடக நிறுவனங்களுக்கும் இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கௌரவமான வணக்கத்தையும் இதயப்பூர்வமான நன்றியையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம்.

அழுத்தங்களுக்கு மத்தியிலும் அஞ்சாமல்உண்மைத் தகவல்களை மக்களிடம் கொண்டு சென்ற உங்களுக்கு எமது கௌரவமான நன்றிகள் என்று இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

முள்ளியவளை தபாலக காணியை விடுவிக்க ரவிகரன் எம். பி.கோரிக்கை

இயற்கை அனர்த்தங்களைத் தடுக்க மரங்களை பாதுகாப்போம் – மன்னார் அரசா