in

மேல் மாகாண இஸ்லாமிய கலை, கலாசார விழா 2026

                 (பேருவளை பீ.எம்.முக்தார்)

மேல் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், களுத்துறை வலய முஸ்லிம் பாடசாலைகள் ஒருங்கிணைத்த “இஸ்லாமிய கலை, கலாசார விழா – 2026” இன்று 16-ஆம் திகதி பாணந்துறை, சரிகமுல்லை ‘டாட்டா வரவேற்பு மண்டபத்தில்’ மேல் மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எஸ். நஜீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இலங்கையின் முதல் இஸ்லாமியத் தமிழ்ப் பேராசிரியரான ம.மு. உவைஸ் அவர்கள் பிறந்த பாணந்துறை மண்ணில் நடைபெற்ற இவ்விழாவில், மேல் மாகாணத்தின் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலாசார நிகழ்வுகள் அரங்கேறின.

அழுத்கம வீதிய மற்றும் கொழும்பு மகளிர் கல்லூரிகளின் ‘மலாய் நடனம்’, பேருவளை சீனங்கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரியின் ‘பல் துறை சார் கலாசார நடனம்’ மற்றும் ‘விருது’ கலை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

முஸ்லிம்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான ‘சீனடி வர்மக் கலை’ காட்சி இடம்பெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர்.

கல்விச் சமூகத்தினர், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகக் கலந்துகொண்டு இவ்விழாவைச் சிறப்பித்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அநுராதபுரம் வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சை தொகுதி

மன்னார், முழங்காவில், மீன்பிடி, வெடிபொருட்கள், மீன்கள் பறிமுதல்