in

புனானை ICST மாணவர்களின் புதிய App அறிமுகம்

கல்வி 

புனானை ICST பல்கலைக்கழக மாணவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட “New App” எனும் செயலியின் அறிமுக நிகழ்வு  (15.09.2026) பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஏ. ஷாஜஹான் பிரதம அதிதியாகவும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, கல்முனை முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், ICST பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சிறியானி விக்ரமசிங்க, பல்கலைக்கழக தவிசாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், தமிழ்நாடு அமைச்சர் ஏ. ஷாஜஹானுடன் வருகை தந்த குழுவினர் மற்றும் ICST பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு, படைப்பாற்றல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய செயலியின் அறிமுகம், பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

இலங்கை வந்துள்ள தமிழக அமைச்சர் ஷாஜஹானுக்கு விமான நிலைவரவேற்ப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பணிப்பாளராக எஸ்.எச்.எம். நி