வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா நெடுஞ்சாலையில் ஜல்லி கல்லால் வாகனம் மற்றும் இருசக்கர செல்வோர் விபத்து ஏற்படும் அபாயமாக உள்ளது.
வாடிப்பட்டி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்திற்கு உட்பட்ட தாலுகா அலுவலகத்தில் இருந்து சாணம்பட்டி அரிசி குடோன் வரை நெடுஞ்சாலை விரிவுபடுத்தப்பட்டு வாகனங்களுக்கு இடையூறு இல்லாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சாலையின் ஓரமாக பொக்லைன் மூலம் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு வந்தன. ஒரு சில நாட்களுக்கு முன்பு மழை பெய்த காரணத்தினால் கால்நடை மருத்துவமனை அருகில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனை அதிகாரிகள் உடனே சீரமைத்தனர். ஆனால் அந்த இடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்வதற்கு இரவு நேரத்தில் சிமெண்ட் ஜல்லி மணல் கலந்து கான்கிரீட்டாக போட்டு பள்ளத்தை மூடி சரி செய்யப்பட்டது. சரியாக சிமெண்ட் பிடிக்காத காரணத்தினால் வாகனங்கள் சென்று ஜல்லி கற்கள் தனியாக பிரித்து வந்துவிட்டது. சாலையில் கற்கள் நிறைந்து இருப்பதினால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அதிகமாக விபத்து ஏற்படும் அபாயமாக உள்ளது.
அப்பகுதியின் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையில் இருக்கும் கற்களை அப்புறப்படுத்தி தரமான சாலை அமைத்து விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings