சென்னை:
நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக படம் திரைக்கு வந்த நிலையில் வரும் 12 ஆம் தேதி மதகஜ ராஜா படம் ரீ ரீலிஸ் ஆக உள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், சென்னையில் பிரி ரீலிஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஷால், டைரக்டர் சுந்தர் சி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசிக் கொண்டிருந்தபோது டிடி விஷாலிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுக்கொண்டு இருந்தபோது நடிகர் விஷாலின் கைகள் பயங்கரமாக நடுங்கின. இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது. பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.
அதே நிகழ்ச்சியில் விஷால் குறித்து நடிகை குஷ்பு பேசியபோது, விஷால் பற்றி குஷ்பூ பேசுகையில், விஷால் நட்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். நண்பர் வந்து மலையில் இருந்து குதிங்க விஷால் என்று சொன்னால் ஏன் எதற்கு என்று கேட்காமல் குதித்து விடுவார் என்று பேசி இருக்கிறார்.
முன்னதாக குஷ்பு நிகழ்ச்சிக்கு வரும்போது அவரை கண்ட நடிகர் விஷால் கட்டியணைத்து முத்தம் கொடுத்த காட்சியும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings