சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய வங்கக்டல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழ்ற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இன்று முதல் வருகிற 29ம் தேதி வரை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
தமிழகத்தின் கோவை, நீலகிரி, ஈரோடு, குமரி, நெல்லை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் புதுச்சேரி ஆகிய 18 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி அளவில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூத்தத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings