ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, ஆனந்தூரில் கிளை நூலகம் நீண்ட காலமாக இயங்கி வருகிறது. இந்த நூலக கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்துள்ளது.
இங்கு வாசகர்கள் படிக்கும் பொழுது மேலிருந்து காரை பெயர்ந்து சிறுசிறு துண்டுகளாக கீழே விழுகிறது. இதனால் நூலகத்துக்கு வரும் வாசகர்கள் பீதியடைந்து இங்கு வருவதை குறைத்துள்ளனர்.
மேலும் மழைக் காலங்களில் மழைநீர் ஒழுவதாகவும், வெயில் காலங்களில் விரிசல் அடைவதாகவும் வாசவர்கள் மிகுந்த வருத்தத்தடன் தெரிவிக்கின்றனர். இதனால் நூலகத்தை பராமரிக்கக் கூடியவர் காலையில் நூலகத்தை திறந்து வைத்துவிட்டு சென்றுவிடுகிறார்.
மாலை நேரத்தில் வந்து பூட்டிவிட்டு செல்கிறார். காலை மாலைக்கு இடைப்பட்ட நேரங்களில் நூலகத்தை பராமரிப்பவர்கள் வருவதற்கும் அச்சப்படும் நிலையில் இக்கட்டிடம் உள்ளது வருந்தக்கூடிய விஷயம் என்று புத்தக புரியர்கள் கூறுகின்றனர்.
இதனை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் மெத்தன போக்கையை கையாண்டு வருவதாக வாசிப்பாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
புத்தகம் வாசிப்பதினால் அறிவுத் திறனை வளர்ப்பதோடு, மன அமைதி கிடைக்கும் என்று நூலகம் வந்தால் இங்கும் மன உளைச்சல் ஏற்படுவதாக வாசகர் வட்டங்கள் தெரிவிப்பதோடு, மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி நூலக கட்டிடத்தை முறையாக பராமரித்து அதனை சரி செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings