in

அசோக்நகர் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சென்னை

சென்னை அசோக் நகர் 3வது அவென்யூவில் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இக் கோயிலை அறங்காவலர் வி.கே.சாமி கருணாகரன் பக்தர்கள் வசதிக்காக பக்தர்கள் பங்களிப்புடன் கோயில் எழுப்பியுள்ளார்.

விழாவை முன்னிட்டு கடந்த 8ம் தேதி காலை 4.45 மணிக்கு பந்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கடந்த 15ம்  தேதி காலை 8 மணிக்கு கரிகோலம் காட்டுதல், 9 மணிக்கு மகா கணபதி ஹோமம், காலை 10 மணிக்கு புதிய விக்ரகம் கண் திறத்தல் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மாலை 4.15 மணியளவில் மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், காப்பு கட்டுதல், முதல் கால யாக பூஜை, அம்பாள் எந்திர ஸ்தாபனம் அம்மன் சிலை பிரதிஷ்டையும், இரவு 8.30 மணிக்கு பூர்ணாவதி தீபாராதனையும் நடைபெற்றது.

16ம் தேதி காலை 6.30 மணியளவில் விநாகர் வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், திரன்யாவதி, பூர்ணாவதி நடைபெற்று 8.45 மணிக்கு விமான கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகமும், 10.30 மணிக்கு தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதியுலா நடைபெற்றது.

விழாவில் புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுனரும், பாஜக நிர்வாகியுமான தமிழிசை சவுந்தரராஜன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் வி.கே.சாமி கருணாகரன், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தந்தை பெரியார் சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்: தவெக தலைவர் விஜய்

எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் ஆனந்தூர் கிளை நூலகம்