in

மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவி முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து

கரூர்

அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியை படிப்பதற்கு முந்தைய அதிமுக கால ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தமிழ்நாடு அரசின் 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் அதிமுக கிளை செயலாளர் மகள் மாவட்டத்தில் முதல் இடங்களை பிடித்து  சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாடக்காப்பட்டி தோகமலை ஒன்றியம் நாட்டகாப்பட்டி அதிமுக கிளை செயலாளர் கருப்பசாமி. அவரது மகள்புனித லட்சுமி, இவர் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரை தனது பெற்றோருடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இவர் தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021–22 ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தார்.அதன் பின்னர் மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வை எழுதியுள்ளார். குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் அவருக்கு மருத்துவ படிப்பில் படிக்க இடம் கிடைக்கவில்லை.

தொடர்ந்து அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கமளித்தும், தனியார் கோச்சிங் சென்டரில் சேர்த்தும் நீட் தேர்விற்கு தயார் படுத்தியுள்ளனர்.இரண்டு ஆண்டுகளாக எழுதிய போதிலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

மருத்துவ படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று ஒரே நோக்கத்துடன் பயின்றவர் இந்த வருட நீட் தேர்வில் 627 மதிப்பெண்கள் பெற்றார். இதன் மூலம் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியை படிப்பதற்கான தமிழ்நாடு அரசின் 7.5% இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் 17 வது இடத்தினையும் மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றார்.இவருக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு பயில்வதற்காக இடம் கிடைத்துள்ளது.

பெற்றோர் இருவரும் பத்தாம் வகுப்பு படித்த நிலையில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் ஆகவும் கனவுடன் தான் நீட் தேர்வை எழுதுவதற்கு தொடர்ந்து பயிற்சி எடுத்து மூன்றாவது முறையாக தேர்வு எழுதி தான் அதிக மதிப்பெண்கள் பெற்றதாகவும், எனக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குரூப் 2 தேர்வு: தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் விடுமுறை

தென்னிலை-கார்வழி சாலையை சீரமைக்க கோரி காத்திருப்பு போராட்டம்