கரூர்
அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு அன்பளிப்பாக விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருடந்தோறும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன் முதலாக பொதுமக்களுக்கு விநாயகர் சிலைகளை அன்பளிப்பாக அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் தொடங்கி தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது.
அதே போல் இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலையில் குடிசையில் வாழும் பொதுமக்களுக்கு களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை சங்கத்தின் மாவட்ட இளைஞரணி செயலாளர் கருணாநீதி தலைமையில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தாளியாம்பட்டி முன்னாள் தலைவர் சுரேஷ், சுரேஷ் , மணி, சக்தி மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
விநாயகர் சிலையை பெற்று கொண்ட பொதுமக்கள் சங்கத்தினரிடம் வருடந்தோறும் எங்களுக்கு விநாயகர் சிலைகளை தொடர்ந்து வழங்கி வழிபாடு செய்ய உதவும் சங்கத்தினருக்கு நன்றி மற்றும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings