சென்னை
சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தின் தொலைபேசி இணைப்பக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு அவர் உள்நாட்டு முனையம் வருகை பகுதி அலுவலகத்தில் தனது பணியை தொடங்கினார்.
இன்று காலை மாற்று பெண் அதிகாரி வந்து பார்த்தபோது அலுவலக கதவு மூடி இருப்பதை கண்டார். நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் அங்கிருந்த ஊழியர்கள் உதவியுடன் கதவை திறந்துபார்த்தபோது நிர்மலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்த விமான நிலைய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தபோது, நிர்மலா இறந்தது உறுதியானது. உடனடியாக விமான நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வருகைதந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையின்போது, வருகிற டிசம்பர் நிர்மலா பணி ஓய்வு பெற இருந்ததாகவும், கடந்த சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings