in

நிருபரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற 2 போலீசார் பணியிட மாற்றம்

சேலம்

சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 25). இவர், சென்னையில் உள்ள தனியார் செய்தி சேனல் நிருபராக பணியாற்றி வருகிறார். இவர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், ஆட்டையாம்பட்டி, காகாபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஆட்டையாம்பட்டி காவல்நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமன், ஏட்டு ராமச்சந்திரன் ஆகியோர் அவ்வழியாக செல்லும் சரக்கு வாகனங்களை மடக்கி, லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

இதை யுவராஜ், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் கேட்டபோது, தான் ஒரு நிருபர் என கூறியிருக்கிறார். ஆனாலும், அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த தகவல் சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவின் கவனத்திற்கு சென்றது. இச்சம்பவம் குறித்து விசாரித்த அவர், அந்த இரண்டு போலீசாரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அவலத்தை கண்டித்து 30ம் தேதி ஆர்ப்பாட்டம்!

A.M.ஜெயின் கல்லூரியில் சட்ட அறிவு & விழிப்புணர்வு கருத்தரங்கம்