ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ரூபாய்154.84 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 10 அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன ஆய்வகங்கள், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, பொது மருத்துவ பிரிவு, டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவு, சி.டி.ஸ்கேன், ரத்த வங்கி உட்பட அனைத்து வசதிகளும் உள்ளன. இதனால் பரமக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை, முதுகுளத்தூர், ராமேஸ்வரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டால் மேல் சிகிச்சைக்காக இங்குதான் கொண்டுவரப்படுகின்றனர்.
ஆனால் உயிர் காக்கும் சிகிச்சை பிரிவு இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. இதனால் தலையில் காயங்களுக்கு சிகிச்சை பெற வேண்டுமானால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை அல்லது மதுரை தனியார் மருத்துவமனைக்கு தான் கொண்டுசெல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
வறுமை நிலையில் உள்ளவர்கள் இந்த சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இதனால் அவர்களால் உயிரை காப்பாற்றுவது என்பது கடினமான சூழ்நிலையாக உள்ளது.
மேலும் ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளில் புண்ணிய ஸ்தலங்கள் நிறைந்துள்ளதால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களும் ஏராளமான ஆன்மீக யாத்திரிகர்களும் வந்து செல்கின்றனர். இதனால் விபத்துகளும் அதிக அளவில் நடை
பெறுகிறது. விபத்தில் சிக்கி தலையில் காயம்பட்டவர்களை ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு 100 கிலோ மீட்டருக்கு மேல் கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. அதற்குள் அவர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையும் உருவாகிறது.
கடந்த சில மாதங்களில் மட்டும் ஏராளமானோர் விபத்துகளில் சிக்கி தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டும், மூளைகளில் ரத்த கசிவு ஏற்பட்டும், மூலையில் ரத்தம் உறைதல் ஏற்பட்டும். மூளை நரம்புகளில் ரத்தம் உறைந்தும் பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings