சென்னை
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு, ஆற்காடு சுரேசின் மனைவி பொற்கொடி, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை, அஸ்வத்தாமன், நாகேந்திரன் உள்பட மொத்தம் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யயப்பட்டார். இந்தநிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி பூவிருந்தவல்லி தனி சிறையில் உள்ள திருமலைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings