in

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தனியிடம் ஒதுக்காவிட்டால் பெரும் போராட்டம்… பாதிக்கப்பட்டவர்கள் வேதனை

சென்னை

சென்னை கோயம்பேட்டில் இயங்கி வந்த புறநகர் பேருந்து முனையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. அதே போல் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை (கிளாம்பாக்கம் பேருந்து முனையும்) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி திறந்து வைத்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து முனைத்திற்கு ஆரம்பம் முதலே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. சென்னை நகருக்கு மத்தியில் பேருந்து முனையம் இருந்த நிலையில் அங்கிருந்து வெகு தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது பயணிகள் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியது.

பயணிகள் மட்டும் இன்றி பேருந்துகளை நம்பி மட்டுமே பணியாற்றி வந்தவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டடனர்.

இதுதொடர்பாக அதிமுக அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி மாநில துணை செயலாளரும், தமிழ்நாடு பேருந்து ஓட்டுனர் சங்க சென்னை மாவட்ட தலைவரும், தமிழ்நாடு ஆம்னி பஸ் மார்க்கெட்டிங் ஏஜென்சிஸ் உரிமையாளருமான ஆம்னி பஸ் இ.அண்ணாதுரை அளித்த பேட்டி வருமாறு:

சென்னை எழும்பூரில் முதலில் டிராவல்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது. அங்கு இடப்பற்றாக்குறை காரணமாக சென்னை கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. 47 ஆண்டுகளாக ஆம்னி பேருந்து பணியை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறேன்.

அதேபோல் 3000க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள், பேருந்து உரிமையாளர்கள், முன்பதிவு ஏஜெண்ட்கள் ஆம்னி பேருந்துகளையே நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தை நிவர்த்தி செய்து வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் எங்களுக்கென்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனி இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்தார். இதனால் நாங்கள் நிம்மதியாக எங்கள் பணியை செய்து வந்தோம்.

ஆனால் தற்போது கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தில் எங்களுக்கென்று தனி இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாடியில் ஒரு ஒதுக்குப்புறமாக பயணிகளுக்கு தெரியாத இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த தொழிலையே நம்பியுள்ள 3000 குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எங்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் தனியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Share on PinterestShare on FacebookShare on Twitter

இதுதொடர்பாக தமிழக முதல்வர், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக தொழில்துறை, குடிசை தொழில், குரு சிறு மற்றும் குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், தொல்.திருமாவளவன் எம்பி., எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை மாநகர காவல் ஆணையர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர்  அன்சுல் மிஸ்ரா ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டது.

ஆனால் இதில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் முதன்மை நிர்வாக அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ஜெ.பார்த்தீபனிடம் இருந்து மட்டுமே பதில் வந்தது. அதில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்துநிலையத்தில் உள்ள அனைத்து வணிகப்பகுதிகள் மற்றும் கடைகள் ஆகியவற்றுக்கு வாடகை நிர்ணயம் செய்தல், வணிகர்களுக்கு ஒதுக்கீடு செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள BVG என்கிற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் இப்பேருந்து முனையத்தில் நேரடியாக கடை ஒதுக்கீடு ஏதும் செய்யவில்லை எனவும், தங்களது மனு உரிய நடவடிக்கைக்காக அந்நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் வேதனையுடன் தெரிவிக்கையில், எங்களது கோரிக்கையான கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் எங்களுக்கென்று தனியிடம் ஒதுக்கீடு செய்து 3000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு காப்பாற்ற தவறினால் நாங்கள் அனைவரும் கோட்டை முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம். குடும்பத்தோடு  தீக்குளிக்கவும் தயங்க மாட்டோம் என்றார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குன்னூர் கரன்சி பகுதியை சேர்ந்த பெண் கவுசல்யா வயநாட்டில் பலி

இலவச கண் பரிசோதனை முகாம்