in

தலைமறைவு கொலை குற்றவாளியை 2 ஆண்டுக்கு பிறகு பிடித்த தனிப்படை: தாம்பரம் ஆணையர் பாராட்டு

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டத்திற்கு உட்பட்ட நாவலூர் நயாரா பெட்ரோல் பங்க் அருகே கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி அன்று மேற்கு வங்கத்தை சேர்ந்த சங்கரதாஸ் என்கிற கட்டிட தொழிலாளியை முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்துவிட்டு கொலையாளி ரஷீத் ஷேக் என்பவர் தனது சொந்த ஊரான ஜார்கண்ட்டிற்கு தப்பியோடிவிட்டார்.

இந்த கொலை வழக்கு தாழம்பூர் காவல் நிலையத்தில் நடைபெற்று வந்தது. கொலை குற்றவாளியை பிடிக்க கடந்த இரணடு ஆண்டுகளாக தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொலையாளி ஜார்கண்ட் மாநிலம் சகேப் கஞ்ச் மாவட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக பள்ளிக் கரணை காவல் துணை ஆணையர் கௌதம் கோயல், உத்தரவின்படி கேளம்பாக்கம் சரக காவல் உதவி ஆணையர் வி.வெங்கடேசன் மேற்பார் வையில் தனிப்படை போலீசார் உதவி ஆய் வாளர் சுமன், தலைமை காவலர் காசிமுருகன் மற்றும் காவலர்கள் முரளி மனோகர் ஜோசி, முஸ்தாக் ஷேக் அகமது ஆகியோர் ஜார்கண்ட் மாநிலம் பர்கவ்வா என்ற இடத்திற்கு சென்றனர்.

ஜார்கண்ட் மாநிலம் உள்ளூர் போலீசார் உதவியுடன் குற்றவாளியின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பங்களாதேஷில் வியாபாரம் செய்வதாகவும், எப்போதோவது ஒருமுறை வீட்டிற்கு வந்து செல்வராகவும் தெரியவந்தது.

வீட்டு விஷேசகத்திற்கு வந்த குற்றவாளியை போலிசார் கைது செய்து ஜார்கண்ட் மாநில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாட்களுக்கு போக்குவரத்து வாரண்ட் வாங்கி சென் னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வங்கதேச எல்லை அருகே தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதை பொருட்படுத்தாமல் துணிச் சலாக சென்று குற்றவாளி கைது செய்து வந்த தனிப்படை போலீசாரை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் பாராட்டினார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மயிலாடுதுறை 36வது வார்டில் மின் கொட்டகையால் தேங்கி நிற்கும் மழைநீர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிகள் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்