கரூர்
யூடிபூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரை சேர்ந்த கிருஷ்ணன் (43) என்பவர் கரூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் ஆன்லைன் வர்த்தகம் செய்ய ரூ.7 லட்சம் அளித்திருந்தார். இந்த பணத்தை கொடுக்க மறுத்த விக்னேஷ், கடந்த ஜூன் 5ம் தேதி கரூரில் கிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல்விடுத்து கல்லால் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து கருர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விக்னேஷ் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சவுக்கு சங்கர் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings