in

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலைய பகுதிகளில் பெண் குழந்தை தொழிலாளர்கள் வெளியூர் வேலைகளுக்கு கடத்திச் செல்லப்படுவதாக வந்த தகவலின்படி அதனை தடுத்து நிறுத்தவும், அவர்களை மீட்டு கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

அவரது உத்தரவின் பேரில் சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.என்.மாலின்

, பச்பன், பச்சாவ்., அந்தோலன் ஆகியோர் இணைந்து கூட்டு நடவடிக்கையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 8 வது பிளாட்பார்மில் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அதிலிருந்து வந்து இறங்கிய ஆகாஷ் பிரதான் (வயது 35) என்பவன் 4 சிறுமிகளோடு நின்று கொண்டிருந்தான். அந்த சிறுமிகளிடம் விசாரிக்கையில், போலீசாரிடம், ஈரோட்டில் உள்ள ஸ்பின்னிங் மில் லில் வேலைக்கு செல்ல போறோம் என பயந்த குரலில் தெரிவித்தனர்.

அவர்களை போலீசார் சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது ராமேஸ்வரன் மகள் பனி மா பிரதான் (வயது 17), பிரசாந்தாடிகல் மகள் காயத்ரி டிகல் (17), சார்ஜின் டிகல் மகள் கரீனா டிகல் (16), தரணிதர்டிகல் மகள் ரிஷ்மா டிகல் (15) என்பது தெரிய வந்தது.

மேலும் இவர்கள் ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் பதசி கிராமத்தை சேர்ந்த பிபின் பிரதான் என்பவரது மகன் ஆகாஷ் பிரதான் (25) என்பவர் ஈரோட்டில் ஸ்பின்னிங் மில்லுக்கு அடிமையாக வேலை செய்ய அழைத்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து 4 குழந்தைகளையும் பாதுகாப்பாக கெல்லீஸ் ஹோமில் தங்க வைத்தனர். குற்றவாளி ஆகாஷ் பிரதான் பணத்திற்கு ஆசைப்பட்டு தவறான செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான். கைது செய்யப்பட்ட அவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கிரேக் மோர் எஸ்டேட்டில் 75-வது இந்திய குடும்ப நல சங்க தின விழா.

திருச்சியில் விஜய்யின் தவெக முதல் அரசியல் மாநாடு