சென்னை
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து மாநில தலைவர் பதவி காலியானது. இந்த இடத்தில் அவரது மனைவியை நியமிக்கலாம் என்று அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இப்பதவியை ஏற்க ஆம்ஸ்ட்ராங் மனைவி ஒத்துக்கொள்ளவில்லை.
இதையடுத்து மாநில தலைவரை நியமிக்க தேசிய தலைமை தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞராக உள்ள பி.ஆனந்தனை தமிழ்நாடு மாநில தலைவராக பகுஜன் சமாஜ் கட்சி நியமனம் செய்துள்ளது. மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings