மும்பை
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் பட்டயக் கணக்கானர் (Chartered Accountant) அன்வி கம்தார். 26 வயதான இவர் பல்வேறு இடங்களுக்கு சென்று ரீல்ஸ் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டவர். இதன் மூலம் இவருக்கு 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் உள்ளனர்.
இந்தநிலையில் மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கும்பே நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் சென்ற அவர், அங்கு தன்னை மறந்து ரீல்ஸ் எடுக்கும் போது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரது நண்பர்கள் போலீசாருக்கும் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த இளம் பெண்ணை மீட்டனர். அருகே உள்ள மங்கான் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் இன்ஸ்டாகிராம் பாலோவர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings