சென்னை
தமிழக அரசு சார்பில் டாஸ்மாக் பெயரில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏராளமான பொருட்கள் தற்போது ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் டாஸ்மாக் மதுபானங்களையும் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்ய உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் மூலம் மதுபானங்களை வீடுகளுக்கு விநியோகம் செய்ய எந்த திட்டமும் இல்லை. இதுபோன்ற எந்த புதுமுயற்சியிலும் டாஸ்மாக் நிர்வாகம் இறங்கத் திட்டம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings