சென்னை
மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியை தழுவினார். இதனைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரியில் திமுக தொண்டர்கள் சாலையில் அண்ணாமலை உருவபடத்தை வைத்து அதன் முன்பு ஆடு வெட்டினர்.
இந்த காணொலிகளும், புகைப்படங்களும் இணைய தளத்தில் வைரலானது. இதையடுத்து திமுக தொண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜக பிரமுகர் மோகன்தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய நீதிபதிகள், சாலையில் அண்ணாமலையின் புகைப்படத்தை வைத்து ஆடு வெட்டியதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று அதிருப்தி தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings