in

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதல் அமைச்சரின் காலை உணவு திட்டத்தை கடந்த 15.9.2022 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இந்த காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாபவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முன்னதாக அதே பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் அரசு 3,995 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ப்ளூமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாதாந்திர கூட்டம்

அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டிய திமுகவினர்… கோர்ட் அதிருப்தி