சென்னை
சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக உள்துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தமிழக போலீஸ் அகாடமி இயக்குனராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் சென்னை புதிய காவல் ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings