கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் கடந்த 18-ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் விற்பனை செய்தவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த 21 பேரை சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைதான மாதேஷை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள இயங்காத பெட்ரோல் பங்கின் கீழே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கி உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேரில் வந்து விசாரித்த சிபிசிஐடி போலீசார் பெட்ரோல் பங்கிற்கு தற்காலிகமாக சீல் வைத்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings