திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர், உறவினர்கள் பெண் தேடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செல்போன் செயலி மூலம் ஈரோடு மாவட்ட கொடுமுடியைச் சேர்ந்த சந்தியா (வயது 32) என்கிற பெண் மகேஷ் அரவிந்துக்கு அறிமுகமானார்.
இருவரும் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு வாட்ஸ்ஆப்பிலும் பேசி வந்துள்ளனர். அப்போது தமிழ்செல்வி என்ற இடைத்தரகரை சந்தியா அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும். அவர் உயிருடன் இருக்கும்போதே தனது திருமணத்தை பார்க்க விரும்புவதாகவும், எனவே தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மகேஷ் அரவிந்தை சந்தியா வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் தமிழ்செல்வி தலைமையில் மகேஷ் அரவிந்துக்கும், சந்தியாவுக்கும் கடந்த ஜூன் மாதம் பழனி அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடந்தேறியது.

திருமண மானதும் சந்தியாவிற்கு 12 சவரன் நகைகளை அரவிந்த் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் இவரது நடவடிக்கை சரியில்லாததை உணர்ந்த அரவிந்த், சந்தேகமடைந்து சந்தியாவின் செல்போனை ஆராயந்துள்ளார். அதில் பல ஆண்களுடன் சந்தியா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஆதார் அட்டையை சோதித்தபோது அதில் அவரது கணவர் பெயர் என்று வேறு ஒருவர் பெயரை இணைத்திருந்ததையும் கண்டுபிடித்தார்.
இதையடுத்து அவர் சந்தியாவிடம் இதுபற்றி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அரவிந்தை சந்தியா மிரட்டியுள்ளார். இதனால் உடனடியாக தாராபுரத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் அரவிந்த் புகார் அளித்தார். போலீசார் சந்தியாவை பிடித்து விசாரிக்கும்போதே அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
சந்தியா குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதும், அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது.
மேலும், திருமணமாகாத 40 வயதுக்குட்பட்ட ஆண்களை குறிவைத்து திருமணம் செய்துகொண்டு திடீரென சண்டையிட்டு நகை பணத்துடன் ஓடிப்போவதை வாடிக்கையாக வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவரது வலையில் காவல் உதவி ஆய்வாளர், மதுரையில் ஒரு காவலர், சர்வேயர், கொடுமுடியில் ஒரு இளைஞர் என 20க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியதும் ஒன்றன்பின் ஒன்றாக தெரியவந்தது.
இதற்கிடையே புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த சந்தியாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பிறகு பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்படும் பட்சத்தில் அவரிடம் எத்தனை ஆண்கள் ஏமாற்றமடைந்தார்கள் என்கிற உண்மை நிலை தெரியவரும்,
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings