in

பூனைக்கு கவுரவ டாக்டர் பட்டம்… வியப்பில் உலகம்

வாஷிங்டன்:

பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்குவது வழக்கம். மேலும் தொழிலதிபர்கள், கலைத்துறையினர், சாதனை படைத்தவர்கள் என பலருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பூனைக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.

அமெரிக்காவின் வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்கிற பூனை கடந்த 4 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தில் சுற்றி வருகிறது. இந்த பூனை மாணவர்களிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டது.

அதோடு பல்கலைக்கழக வளாகத்தில் குப்பை தொட்டிகளை பொறுப்புடன் பராமரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை பாராட்டி மேக்ஸ் பூனைக்கு பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூனைக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது உலக அளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கள்ளக்காதலை கண்டித்த கணவரை கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற மனைவி

ஸ்டெர்லைட் ஆலை நுழைவும் போராட்ட வரலாறும் இரத்த சாட்சிகளால் மூடப்பட்டதும்!