சென்னை:
சென்னையில் சைதன்யா மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் +2 சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு சென்னை பல்லாவரத்தில் உள்ள சைத்தானியா தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஆசிரியர்கள் சிறப்பித்தனர்.
சிபிஎஸ்இ பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சைதன்யா தனியார் பள்ளியை சேர்ந்த மோனிகா என்ற மாணவி 494 மதிப்பெண்களும், சந்தோஷ் என்கிற மாணவன் 491 மதிப்பெண்களும், சர்வேஷ் என்கிற மாணவன் 490 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதேபோல் மொத்தம் 25க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 480க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
அதேபோல் 2023-24 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொது தேர்வில் சைதன்யா தனியார் பள்ளியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற மாணவி 496 மதிப்பெண்களும், விபின் தேவேஷ், கார்த்திக் ஆகிய மூவரும் 495 மதிப்பெண்களும் எடுத்து சாதனைபடைத்துள்ளனர். அதேபோல வத்ஸன், இமானுவேல் ஆகியோர் 494 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து சைதன்யா தனியார் பள்ளி இயக்குனர் கூறுகையில், ஸ்ரீ சைதன்யா பள்ளியின் சாதனைக்கு கடின உழைப்பும் மாணவ மாணவிகளின் முழு அர்ப்பணிப்பும் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த மாபெரும் சாதனையால் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிபிஎஸ்இ பொது தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இது குறித்து மாணவ மாணவிகள் கூறுகையில், பள்ளியில் ஆசிரியர்கள் சிறந்த முறையில் பாடங்கள் நடத்தி தொடர்ந்து தேர்வுகள் நடத்தி பயிற்சிகள் கொடுத்ததால் நாங்கள் அனைவரும் தேர்வு அறையில் எந்த ஒரு பதட்டமும் பயமும் இன்றி தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளோம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings