சென்னை
சிதம்பரம் நடராஜர் கோயில் கனசபை மீது நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக் கூடாது என்கிற பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.
இந்தநிலையில் ஆனி திருமஞ்சன உற்சவத்தின்போது கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி (பொறுப்பு) அரங்க மகாதேவன், நீதிபதி முகமது சவுக் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசாணைக்கு தடை விதிக்கவில்லை என்று விளக்கம் அளித்து.
இதையடுத்து நீதிபதிகள் அளித்த உத்தரவில், கனகசபை மீது பக்தர்கள் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதில் விதிமீறல்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்தனர்.
இதனையடுத்து ஆனி திருமஞ்சன உற்சவத்தின் முதல் நாளான இன்று காலை பக்தர்கள் கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய பொது தீட்சிதர்களால் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து திரளான பக்தர்கள் கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings