சென்னை
தெகிடி, மோயாத மான், வட்டம், டேடி, லிப்ட் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் பிரதீப் விஜயன். சென்னை பாலவாக்கத்தில் பிரதீப் விஜயன் வசித்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்தநிலையில் இரு தினங்களாக இவரது நண்பர்கள் போன் செய்தும் இவர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த நண்பர், பிரதீப் விஜயன் விட்டிற்கு சென்று பார்த்தபோது அவர்து வீட்டுக் கதவு உள்புறமாக பங்டடப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த அவர், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திறகு வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு எங்கு தேடியும் பிரதீப் இல்லாத நிலையில் கடைசியாக கழிவறையில் சென்று பார்த்தபோது தலையில் அடிபட்டு இறந்து கிடந்ததார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அவருக்கு தலைச்சுற்று, மயக்கம் இருந்த நிலையில் கழிவறையில் கீழே விழுந்து அடிபட்டிருக்குமோ என்று போலீஸ் தரப்பில் பேசப்படுகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings