தூத்துக்குடி
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் ஒட்டு சேகரித்தார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை ஆதரித்து இத் தொகுதிக்குட்பட்ட திருநந்திபுரம் பஞ்சாயத்து, பிடாரிபட்டு பஞ்சாயத்து, செ.குன்னத்தூர் பஞ்சாயத்து பகுதிகளில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வீடு வீடாக சென்று தி.மு.க. அரசின் சாதனைகளை கூறி உதய சூரியனுக்கு ஒட்டு சேகரித்தார்.
இதில் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், எஸ்.ஜெ.ஜெகன், விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் வேம்படி ரவி, ஒன்றிய துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், சுப்பிரமணியன், ராமசாமி, சுரேஷ காந்தி, இசக்கி பாண்டியன், உடன்குடி டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் அஸ்ஸாப் அலி பாதுஷா, வக்கீல் கிருபாகரன், வாள் சுடலை, மாவட்ட பொறியாளர் அணி ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings