in

தி.மலை கோயிலுக்கு சொந்தமான 1218 சதுரஅடி ஆக்கிரமிப்பு நிலம்மீட்பு

வேட்டவலம்:

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான கிரிவலப் பாதையிலுள்ள ஆணாய் பிறந்தான் கிராமம் பகுதிக்கு உட்பட்ட நந்தி மண்டபம் குளம் இடமானது சர்வே எண் 20/1- ல் 1.06.50 ஹெக்டேரில் 2.63 ஏக்கரில் 1218 சதுர அடி ஆக்கிரமிப்பு நிலத்தில் ஆத்துமீறி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து இணை ஆணையர், செயல் அலுவலர், வருவாய் துறை அலுவலர்கள், காவல்துறை, ஆலய நிலங்கள் வட்டாட்சியர், நில உரிமம் பெற்ற அளவையர்கள், மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு 1218 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தினை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது.

மேலும் இந்த இடத்தை பாதுகாக்கும் பொருட்டு கம்பி முள் வேலி அமைத்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மீட்க்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.85 லட்சம் ஆகும்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சவுக்கு சங்கர் விவகாரம்: சட்டத்தை கையில் எடுத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

தீவட்டிப்பட்டி நிகழ்வுகளை ‘உண்மையறியும் குழாம்’ எப்படி பார்க்கிறது?