சென்னை:
லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்யவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவைச் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
வரும் 8-ம் தேதி லண்டனில் மேற்கத்தியப் பாரம்பரிய சிம்பொனியை இசையமைப்பாளர் இளையராஜா அரங்கேற்றம் செய்ய உள்ளார். இதையொட்டி, இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவிக்கச் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அவரை இளையராஜா பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
முதல்வரும் இளையராஜாவிடம் தமிழக அரசு சார்பாகவும், என் சார்பாகவும், முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி சார்பாகவும் வாழ்த்துகள் எனக் கூறி பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கினார். பின்னர் இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இதையொட்டி, பதிவு செய்யப்பட்ட காணொலியையும் முதல்வர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இளையராஜா பதிவிட்ட சமூக வலைதளபதிவில், “முதல்வர் மு.க.ஸ்டாலின், இசைக்கு அளித்த பேராசி என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன. மிக்க நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
GIPHY App Key not set. Please check settings